கோலாலம்பூர்: அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரிகளுக்கு வர்த்தக நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததைத் தொடர்ந்து ரிங்கிட் வலுவடையத் தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் அமெரிக்க டாலருக்கு நிகராக ரிங்கிட்டின் மதிப்பு 4.2180ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை முடிவில் அதன் மதிப்பு 4.2390ஆக இருந்தது.
மலேசிய முவாமலட் வங்கியின் தலைமை பொருளியலாளரான டாக்டர் முகமட் அஃப்ஸானிஸாம் அப்துல் ரஷித், அமெரிக்காவின் பொருளியல் பலவீனமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
வேலை இல்லாதோர் எண்ணிக்கை கடந்த வாரம் மேலும் 240,000 அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முந்தைய வாரத்தில் 1.89 மில்லியனாக இருந்த வேலை இல்லாதோர் எண்ணிக்கை மே 17ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் 1.91 மில்லியனுக்குக் கூடியது.
அது மட்டுமல்லாமல் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாவது மதிப்பீட்டில் காலாண்டு அடிப்படையில் 0.2 விழுக்காடு சுருங்கியது.
“இது, முதலில் மதிப்பிடப்பட்ட பூஜ்யத்திற்குக்கீழ் 0.3 விழுக்காட்டைவிட சற்று அதிகம். ஆனால் முந்தைய காலாண்டில் 2.4 விழுக்காடாக விரிவடைந்ததைவிட குறைவு,” என்றார் திரு அப்துல் ரஷித்.
தொடர்புடைய செய்திகள்
இது, அமெரிக்க டாலர் பலவீனமடைவதைக் காட்டுகிறது. இந்த நிலை தொடருவது ரிங்கிட்டுக்கு சாதமாக இருக்கும் என்று பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.