தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மலேசிய வரலாற்றில் ஆகப்பெரிய டோட்டோ குலுக்கல்

$36 மி. பரிசுத்தொகையை நால்வர் பகிர்ந்தனர்

1 mins read
c6e08559-ff3f-4ade-9b70-4964267c92ef
குலுக்கல் சீட்டு வாங்க மலேசியா எங்கும் உள்ள கடைகளில் பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். - படம்: தி ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய வரலாற்றிலேயே ஆகப்பெரிய ‘ஸ்போர்ட்ஸ் டோட்டோ 4D’ குலுக்கலில் 121 மில்லியன் ரிங்கிட் (S$36.8 மி.) பரிசுத்தொகையை நால்வர் பகிர்ந்துகொண்டனர்.

பந்தய நிறுவனமான ஸ்போர்ட்ஸ் டோட்டொ வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.

குலுக்கலில் பணக்காரராகும் வாய்ப்பைக் கருதி ஏராளமானோர் குலுக்கல் சீட்டுகளை வாங்கியதால் அதன் விற்பனை அமோகமாக இருந்ததாக ஸ்போர்ட்ஸ் டோட்டொ தலைமை நிர்வாகி நெரின் டான் கூறினார். குலுக்கல் சீட்டு வாங்க மலேசியா எங்கும் உள்ள கடைகளில் பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

பரிசுத்தொகை 100 மில்லியன் ரிங்கிட்டுக்குமேல் சென்றிருப்பது இதுவே முதன்முறை.

ஆனால், கடைகளில் மக்களின் வரிசை நீண்டதால் சிலர் அடாவடித்தனமாக நடந்துகொண்டனர். பெயர் குறிப்பிடப்படாத ஒரு கடையில் தகராறு மூண்டதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது. மாது ஒருவர் அலறுவது அதில் தெரிந்தது.

வரிசையில் முந்தியதாக நம்பப்படும் ஆடவர், மாது இருவரை குறைந்தது மூவர் தாக்குவதை அக்காணொளி காட்டியது. அச்சம்பவத்தை சிலர் படமெடுத்தாலும், எவரும் தலையிட்டு சண்டையை நிறுத்தவில்லை.

குறிப்புச் சொற்கள்