தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்மாதிரி பணியாளர் விருதை வென்ற மலேசிய தமிழர்

1 mins read
4b7d5b7d-3ef0-4a63-bf1c-83e2e29410f6
படம்: சமூக ஊடகம் -

மலேசியாவில் 2023ஆம் ஆண்டுக்கான முன்மாதிரி ஊழியர் விருது மருத்துவர் மலர் சாந்திக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய மக்களுக்கு சுகாதாரக் குறிப்புகளை தொடர்ந்து வழங்க இந்த விருது பெரிய ஊக்கம் தந்துள்ளதாக மலர் சாந்தி மலேசிய ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவராக உள்ள மலர், சமூக ஊடகங்கள் வழி மிக எளிமையான முறையில் மருத்துவக் குறிப்புகளை வழங்கிவருகிறார்.

மக்கள் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மருத்துவமனைகளை நாடும் போக்கு குறையும் என்கிறார் அவர்.

முன்மாதிரி ஊழியர் விருதை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிமிடம் மலர் பெற்றார்.

தமக்கு விருது கொடுத்த அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த மலர், தமது பெற்றோர், கணவர் மற்றும் இரண்டு மேலாளர்கள் உதவியின்றி இது நட ந்திருக்காது என்றும் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொடர்பான தகவல்களையும் தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வையும் காணொளி வாயிலாக சமூக ஊடகங்களில் அவர் பரப்பினார்.

குறிப்புச் சொற்கள்