மலேசியாவைச் சேர்ந்த 18 வயது மாணவர், நாயைத் தீ வைத்துக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மார்ச் மாதம் நாய்க்கு தீ வைத்து துன்புறுத்தி கொன்றதாக ஆடவர் மீது ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின் படி பிராடென் யாப் ஹாங் செங் என்ற அந்த நபர் பெண் நாயை அடித்து துன்புறுத்தியதாகவும் அதன் பின்னர் நாய் மீது அவர் தீ வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மார்ச் 27ஆம் தேதி நள்ளிரவு 1:49 மணிவாக்கில் ஆடவர் அந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தார்.
குற்றத்திற்காகத் தாம் வருந்துவதாகவும், தமக்கு ஒரு வாய்ப்பு வழங்குபடியும் யாப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆடவருக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவில் விலங்குகளைத் துன்புறுத்தினால் 6,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

