8.7 மில்லியன் பயணிகளைக் கையாண்ட மலேசிய விமான நிலையங்கள்

8.7 மில்லியன் பயணிகளைக் கையாண்ட மலேசிய விமான நிலையங்கள்

1 mins read
93e3fd2d-17fd-41ef-a6a7-8a1c819c4e7a
விமானச் சேவைகளின் விரிவாக்கம், விசா விலக்கு போன்றவை பயண எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணங்கள். - கோப்புப் படம்: மலாய் மெயில்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவிற்கு பிப்ரவரி மாதம் வந்து சென்ற விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8.7 மில்லியன் என்றும் இது ஆண்டு அடிப்படையில் 6.9 விழுக்காடு அதிகம் என்றும் மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (Mavcom) தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் விமானப் பயணிகளின் எண்ணிக்கையில் 5.9 விழுக்காடு சரிவு ஏற்பட்டதாக ஆணையம் வியாழக்கிழமை (மார்ச் 27) வெளியிட்ட அறிக்கை கூறியது.

இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை 17.9 மில்லியன் பயணிகள் மலேசிய விமான நிலையங்களைக் கடந்துள்ளனர்.

ஆண்டு இறுதிவரை மலேசியாவுக்கு வந்து செல்லக்கூடிய விமானப் பயணிகளின் எண்ணிக்கை 105.8 மில்லியனுக்கும் 112.9 மில்லியனுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று ஆணையம் கணித்துள்ளது.

விமானப் போக்குவரத்தில் தொடர்ந்து காணப்படும் வேகமான வளர்ச்சியின் காரணமாக அந்த முன்னுரைப்பை அது வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 4.3 மில்லியன். அது ஆண்டு அடிப்படையில் 6.6 விழுக்காட்டு வளர்ச்சி.

அதேபோல, அனைத்துலக விமானப் பயணிகளின் எண்ணிக்கை 4.4 மில்லியன் என்றும் அது 7.2 விழுக்காடு வளர்ச்சி என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானத் தொடர்புகளின் விரிவாக்கம், விசா விலக்கு, தொடரும் பள்ளி விடுமுறைக் காலம் ஆகியன காரணமாக பயணங்கள் கூடியுள்ளன.

குறிப்புச் சொற்கள்
மலேசியாவிமானப் பயணம்போக்குவரத்து