கோலாலம்பூர்: மலேசியாவில் டீசலுக்கு வழங்கப்பட்ட மானியம் சில பிரிவு பேருந்துகளுக்கு மட்டுமே உள்ளது.
அதனால் ஜூன் 10ஆம் தேதி முதல் சுற்றுலாப் பேருந்துகள் விரைவு பேருந்துகள் போன்றவற்றில் பயணம் செய்பவர்கள் கூடுதல் கட்டணங்களைச் செலுத்தக்கூடும்.
கட்டணங்கள் 15 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை அதிகரிக்கலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். மானியம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் இந்த விலை அதிகரிப்பு இருக்கும் என்று அவர் கூறினார்கள்.
வர்த்தக ரீதியாக கட்டணங்களை அதிகரித்தால் சுற்றுலா வரும் பயணிகள் அதிக விலைகொடுத்து பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படும். இதனால் தொழில் ரீதியான பாதிப்புகளும் ஏற்படலாம் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

