நிலையற்ற சூழலிலும் பொருளியல் வளர்ச்சி: அன்வார் பெருமிதம்

நிலையற்ற சூழலிலும் பொருளியல் வளர்ச்சி: அன்வார் பெருமிதம்

1 mins read
fbe1dc91-9b75-4238-bdce-a2224e450044
தேசிய விளையாட்டு விருதுகள் விழாவில் பேசிய பிரதமர் அன்வார், நாட்டின் பொருளியல் வளர்ச்சி 2025ஆம் ஆண்டிலும் இவ்வாண்டின் முதலாம் காலாண்டிலும் முன்னுரைப்புகளைத் தாண்டி அதிக அளவில் பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மத்திய கிழக்கு நெருக்கடியால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், மலேசியாவின் பொருளியல் வளர்ந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்,

தேசிய விளையாட்டு விருதுகள் விழாவில் பேசிய பிரதமர் அன்வார், நாட்டின் பொருளியல் வளர்ச்சி 2025ஆம் ஆண்டிலும் இவ்வாண்டின் முதலாம் காலாண்டிலும் முன்னுரைப்புகளைத் தாண்டி அதிக அளவில் பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டார்.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஏறத்தாழ 70 அமெரிக்க டாலராக இருக்கும் என்ற அடிப்படையில் நாட்டின் பொருளியல் கணிப்புகள் அமைக்கப்பட்டிருந்த வேளையில், போர்ச் சூழலால் எண்ணெய் விலை 100 அமெரிக்க டாலரைத் தாண்டியது.

இந்த அனைத்துலக பாதிப்பினால், தாம் வெளிநாட்டுப் பயணங்களைச் சுருக்கிக்கொண்டு அவசரமாக நாடு திரும்பி, பொருளியல் நடவடிக்கைக் கூட்டங்களை வழிநடத்த வேண்டியிருந்தது என்று பிரதமர் அன்வார் கூறினார்.

இருப்பினும், விளையாட்டு மற்றும் பொருளியல் வளர்ச்சி ஆகிய இரு துறைகளிலும் முன்னுரைக்கப்பட்டதைவிடவும் மலேசியா கூடுதல் சாதனை படைத்துள்ளது நாட்டின் மீள்திறனைப் பிரதிபலிப்பதாக அவர் பெருமிதம் கொண்டார்.

இதற்கிடையே, உலகளாவிய நிச்சயமற்ற சூழல் நிலவியபோதிலும், உள்நாட்டுத் தேவைகளின் காரணத்தால் மலேசியப் பொருளியல் 2026ஆம் ஆண்டில் நான்கு முதல் ஐந்து விழுக்காடு வரையிலான நிலையான வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று மலேசியாவின் மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்