மலேசியாவில் வேலையின்மை விகிதம் 3.2 விழுக்காட்டுக்குச் சரிந்தது

1 mins read
8524bca5-51e6-455b-a4b9-dcda11d8eb31
பட்டதாரிகளின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு 5.98 மில்லியனைத் தொட்டதாக புள்ளிவிவரத் துறையின் அறிக்கை குறிப்பிட்டது. - படம்: ஊடகம்

புத்ராஜெயா: மலேசியாவில் கடந்த ஆண்டு வேலையின்மை விகிதம் சரிந்து 3.2 விழுக்காட்டைத் தொட்டதாக மலேசிய புள்ளிவிவரத் துறை சனிக்கிழமை (நவம்பர் 1) தெரிவித்தது.

அதேநேரம், பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து 5.98 மில்லியனைத் தொட்டுவிட்டதாகவும் 2024ஆம் ஆண்டுக்கான பட்டதாரிகள் தொடர்பான புள்ளிவிவர அறிக்கை குறிப்பிட்டது.

பட்டம் பெற்றவர்கள் இடையேயான வேலையின்மை விகிதம் 2024ஆம் ஆண்டு 0.2 விழுக்காட்டுக்குச் சரிந்ததாக தலைமைப் புள்ளிவிவர அதிகாரி டாக்டர் முகம்மது உஸிர் மைதின் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு அந்த விகிதம் 3.4 விழுக்காடாக இருந்தது என்றார் அவர்.

வேலை தேடிப் பெறுவதில் பட்டதாரிகள் ஆர்வம் காட்டியதன் விளைவாக, பட்டப் படிப்பை முடித்த மூன்று மாதங்களில் 61.1 விழுக்காட்டுப் பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தமாக 2024ஆம் ஆண்டு 4.98 மில்லியன் பட்டதாரிகள் வேலையில் இருந்தனர். அது 2023ஆம் ஆண்டின் 4.76 மில்லியனைக் காட்டிலும் 4.6 விழுக்காடு அதிகம்.

மலேசியாவில் மேம்பட்டு வரும் ஊழியர் சந்தை நிலவரத்தை இது உணர்த்துவதாக திரு முஹம்மது உஸிர் தெரிவித்து இருந்தார்.

குறிப்புச் சொற்கள்