தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் ஆடவர் கடத்தப்படும் காணொளியால் பரபரப்பு

1 mins read
e29cba59-d663-4a29-bac7-5caf7aa4b16a
படம்: THE STAR/ASIA NEWS NETWORK -

மலேசியாவின் கெடா பகுதியில் பட்டப்பகலில் ஆடவர் ஒருவர் ஐந்து நபர்களால் காரில் வைத்து கடத்தப்படும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சம்பவத்தை கடத்தல் குற்றமாகவும் மலேசிய காவல்துறை பதிவு செய்துள்ளது.

41 நொடிகள் ஓடும் அந்த காணொளியில் ஆடவர் கத்துவதும் அவரை காரின் பின் இருக்கையில் தள்ளுவதும் பதிவாகியுள்ளது.

ஆடவரை அந்த நபர்கள் அடிப்பதையும் காணமுடிந்தது.

சம்பவம் ஹோட்டல் ‌‌ஷஹாப் பெர்டானா முன் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) மாலை 6:30 மணிவாக்கில் நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.

கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர்.

கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த 5 சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் உள்ளார்.

சந்தேக நபர்களில் ஒருவரை செவ்வாய்க்கிழமை காலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்