தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கால்வாய்க்குள் பாய்ந்த கார்; ஆடவர் காயம்

1 mins read
af830d26-2b75-4cfe-8f5f-1d6551385c08
கால்வாய்க்குள் பாய்ந்த கார். - படம்: தி ஸ்டார்
multi-img1 of 2

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் ஆடவர் ஒருவர் தமது காரைத் தற்செயலாகக் கால்வாய்க்குள் செலுத்திவிட்டார்.

குடாட் மாவட்டம், ஜாலான் தம்பலாங்கில் வியாழக்கிழமை (ஜனவரி 18) முற்பகல் 11.20 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இதில் காரை ஓட்டிச் சென்ற அப்துல் அமீர் லக்கிபோ, 42, என்ற ஆடவர் காயமடைந்தார்.

தகவலறிந்ததும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆயினும், அதற்கு முன்னதாகவே வழிப்போக்கர்கள் திரு அப்துலை மீட்டுவிட்டதாக சாபா தீயணைப்பு, மீட்புப் படையின் உதவிச் செயல் இயக்குநர் ஹம்சா இஸ்நூர்தினி கூறினார்.

நிகழ்விடத்திலேயே திரு அப்துலுக்கு முதலுதவி அளித்து, பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாக திரு ஹம்சா சொன்னார்.

கால்வாய்க்குள் விழுந்த கார் நண்பகல் 12.05 மணியளவில் மீட்கப்பட்டுவிட்டது என்றும் இவ்விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்