ஆயுதமேந்திய பாதுகாப்புடன் மணமகளுக்கு வரதட்சணை அனுப்பிவைத்த மணமகன்

திருமணமாவதற்கு முன்பே தங்கக் கட்டிகள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், 9.98 மில்லியன் யுவான் (S$1.9 மில்லியன்) ரொக்கம் எனப் பரிசுகளால் தமது வருங்கால மனைவியைத் திக்குமுக்காட வைத்துள்ளார் சீனாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர்.

சீனர்களுக்குப் பிடித்தமான செந்நிறத்திலான ஆறு பெட்டிகளில் அவை அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ரொக்கம் முழுவதும் மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில் போடப்படும் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி, இணையவாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளது.

இப்படித் திருமணத்திற்குமுன் மணப்பெண்ணுக்குப் பரிசளிப்பது சீனாவின் கிழக்கு மாநிலமான ஸெஜியாங்கின் டைஸோ நகரில் வழக்கமான ஒன்றுதான் எனச் சொல்லப்படுகிறது.

பரிசுகளை அனுப்பிவைத்த 30 வயதான திரு யான் அவரின் மணப்பெண்ணும் இவ்வாண்டு இறுதியில் மணமுடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இப்படி மணப்பெண்ணுக்கு ஆடம்பரப் பரிசுகளை வழங்கும் வழக்கத்தை ஒழிக்க அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வந்தாலும் அது சற்றும் குறைவதாகத் தெரியவில்லை.

இந்த வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக, அதாவது ஹான் அரச மரபிலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதால் ஒரே இரவில் அதனை ஒழிக்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது.

@webossx

#新人 #訂婚 押鈔車運送998萬現金彩禮到場 ,準新郎:這在當地很常見 #浙江

♬ 原声 - We - We
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!