திருடப்போன இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஆடவர் மரணம்

திருடப்போன இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஆடவர் மரணம்

1 mins read
c4590294-8dd0-42da-a26e-62a383097357
படம் - தமிழ் முரசு

ஈப்போ: வீடு புகுந்து திருட முயன்றபோது 40 வயது ஆடவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அச்சம்பவம் மலேசியாவின் ஈப்போ மாநிலத்திலுள்ள தாமான் ஸ்டாரில் செவ்வாய்க்கிழமை காலை 5 மணி அளவில் நடந்துள்ளது.

சந்தேக நபர் மற்றொருவருடன் வீட்டின் சன்னலை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போது வீட்டைக் காவல் காத்தவருக்கும் திருடர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், மற்றொருவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருக்கு இதயத்திலுள்ள ரத்த நாளத்தில் அடைப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகப் பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அச்சம்பவம் எதிர்பாராத மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திருட்டுச் சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டப் பிரிவுகளின்கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. தப்பியோடியவரைக் காவல்துறை தேடிவருவதாகப் பேராக் காவல்துறை ஆணையர் முகமது அல்வி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்