வித்தியாசமான பழக்கத்தால் பிரபலமான ஆடவர்

1 mins read
2ce961f9-e0a3-433a-8dfb-ec2c973462d2
பல இணையவாசிகள் ஆஸ்டன் ஹாலை கேலி செய்து நகைச்சுவையான காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர். - படம்: ஆஸ்டன் ஹால்/ சமூக ஊடகம்

நியூயார்க்: சமூக ஊடகத்தில் இணையவாசிகளை ஈர்க்க அவ்வப்போது வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு கவனத்தை ஈர்க்க சிலர் முயற்சி செய்வார்கள்.

அந்த வரிசையில் ஆஸ்டன் ஹால் என்னும் உடற்பயிற்சி நிபுணர் சில காணொளிகளை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதிகாலை 3.52 மணிக்கு எழுவது, வாயில் ஒட்டிய டேப்பை அகற்றுவது, பின்னர் குளிரான நீரில் பழச்சாற்றைப் பிழிந்து அதில் முகத்தைக் கழுவுவது, முகம் தெரியாத பெண் ஒருவர் அவருக்கு உதவுவது, நீல நிற தண்ணீர் போத்தலைப் பயன்படுத்துவது, வாழைப்பழத் தோலில் முகத்தைச் சுத்தம் செய்வது என வித்தியாசமான செயலில் ஹால் ஈடுபடுகிறார்.

அவரது காணொளி ஒன்று எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் 633 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டகிராம் பக்கத்திலும் அவரது காணொளிகளை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர்.

ஹாலின் காணொளிகளைப் பொய்யான வாழ்க்கை முறை என்றும் பல இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். சிலர் இதைப் பின்பற்ற வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.

அதேபோல் பல இணையவாசிகள் அவரைக் கேலி செய்து நகைச்சுவையான காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் யூடியூப் பிரபலம் Mr. Beast ஹாலுடன் இணைத்து தற்போது ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதுவும் தற்போது அதிகமான பார்வைகளைப் பெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்