தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாலையில் இருந்த குழியை சரி செய்த நபருக்கு $1500 அபராதம்

1 mins read
a486eee5-9a7f-493b-acaf-2a15d55abf63
படம்: பிக்சாபே -

இத்தாலியில் குண்டும் குழியுமாக இருந்த ஒரு சாலையை சரி செய்த நபருக்கு கிட்டத்தட்ட 1500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளவ்டியோ டிரென்டா என்ற 72 வயது ஆடவர் பர்லாஸ்ஸினா என்னும் பகுதியில் வசித்து வருகிறார். அங்குள்ள ஒரு சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அதை சரி செய்ய அதிகாரிகளை அவர் அணுகினார்.

ஆனால் அவர்களிடம் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லாததால், தாமே களத்தில் இறங்கி சாலையை சரி செய்தார்.

தமது ஓய்வூதியத்தில் கிடைத்தப் பணத்தைக் கொண்டு சாலையை சரிசெய்த தமக்கு அபராதம் விதித்தது எரிச்சல் தருவதாக டிரென்டா கூறினார்.

இருப்பினும் தமக்கு நியாயம் கிடைக்கும் வரைப் போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு காவல்துறையிடம் இருந்து கடிதம் வந்ததாகவும் அதில் தாம் விரைவுச் சாலை விதிமுறைகளை மீறி பொது இடத்தில் தகுந்த அனுமதியில்லாமல் ஆபத்தான வேலையை செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக டிரென்டா சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.

அதுபோக அவர் சாலையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக டிரென்டா கூறினார்.

டிரென்டாவின் செயலுக்கு இணையவாசிகள் பாராட்டும் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அதே நேரம் அதிகாரிகளின் நடவடிக்கையையும் கண்டித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்