தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஆர்டி நிலைய சேவை முகப்பில் பணம் திருட முயன்ற ஆடவர்

1 mins read
35bd63dc-a7de-4db1-8477-2de111c989fb
திருட்டு முயற்சி கோலாலம்பூரின் மியூசியம் நெகாரா எம்ஆர்டி நிலையத்தில் இடம்பெற்றது. - படம்: ஊடகம்

கோலாலம்பூர்: எம்ஆர்டி நிலைய வாடிக்கையாளர் சேவை முகப்பில் அத்துமீறி நுழைந்து, பணம் திருட முயன்ற ஆடவருக்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நிகழ்ந்தது.

பி.துரைராஜன், 35, என்ற அந்த ஆடவருக்கு வேலை ஏதுமில்லை எனக் கூறப்பட்டது.

அவர் இம்மாதம் 16ஆம் தேதி இரவு 12.20 மணியளவில் மியூசியம் நெகாரா எம்ஆர்டி ரயில் நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை முகப்பில் அத்துமீறி நுழைய முயன்றதை ஒப்புக்கொண்டார்.

துரைராஜன் அதனுள்ளே இருந்த பணம் வைக்கும் இயந்திரத்தை உடைத்து, திருட முயன்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இருப்பினும், பாதுகாப்புப் பணியாளர்களிடம் அவர் பிடிபட்டார். பணம் எதுவும் பறிபோகவில்லை.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 16ஆம் தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்