தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவில் கடத்தப்பட்ட நபர் மீட்கப்பட்டார்

1 mins read
631f316a-4e67-4128-aa46-df22dccd7588
படம்: THE STAR/ASIA NEWS NETWORK -

மலேசியாவின் கெடா பகுதியில் பட்டப்பகலில் ஆடவர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார், அவர் தற்போது மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடத்தலுக்குள்ளான 28 வயது ஆடவர் எதற்காகக் கடத்தப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடத்தல் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) மாலை மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பெண்ணும் உள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ரத்தத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபனமாகியுள்ளது.

ஆடவர் கடத்தப்படும் காணொளி சமூக ஊடகங்களில் திங்கட்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 41 நொடிகள் ஓடும் அந்த காணொளியில் ஆடவர் கத்துவதும் அவரை காரின் பின் இருக்கையில் சந்தேக நபர்கள் தள்ளுவதும் பதிவாகியிருந்தது.

கடத்தல் சம்பவம் ஹோட்டல் ‌‌ஷஹாப் பெர்டானா முன் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) மாலை 6:30 மணிவாக்கில் நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்