தொலைந்துபோன பயணப்பெட்டியைக் கண்டுபிடிக்க உதவிய 'ஏர்டேக்'

தொலைந்துபோன பயணப்பெட்டியைக் கண்டுபிடிக்க உதவிய 'ஏர்டேக்'

1 mins read
72b53792-e1ba-4b4c-90f5-5e3f14c2ee0f
அது பொருத்தப்பட்டுள்ள பொருள்கள் கொண்டுசெல்லப்படும் இடங்களை கைப்பேசி செயலி வாயிலாகத் தெரிவிக்கும் கருவியே 'ஏர்டேக்'. படம்: ஆப்பிள் சிங்கப்பூர் -

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள விமான நிலையத்தில் பயணப்பெட்டிகளைப் பெறும் இடத்தில் தனது பயணப்பெட்டியைத் தொலைத்தார் அமெரிக்கரான திரு ஜேம்ஸ் ரீட். சில நாள்களுக்குப் பிறகு தானே அதைக் கண்டுபிடிக்கவும் செய்தார்.

தனது பயணப்பெட்டியில் ஆப்பிள் நிறுவனத்தின் 'ஏர்டேக்' கருவியை வைத்தது அவரின் நினைவுக்கு வந்தது.

"எனது பயணப்பெட்டிக்குள் 'ஏர்டேக்' கருவியை நான் போட்டு வைத்திருந்தேன். ஒருநாள் அது எனக்குத் தேவைப்படும் என்பதை நான் அறிந்தேன். நான் நினைத்ததைப்போல அது பயனுள்ளதாக அமைந்தது," என்று அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திரு ரீட் கூறினார்.

அவரது பயணப்பெட்டியில் US$3,000 (S$3,900) மதிப்பிலான பொருள்கள் இருந்தன.

அது பொருத்தப்பட்டுள்ள பொருள்கள் கொண்டுசெல்லப்படும் இடங்களை கைப்பேசி செயலி வாயிலாகத் தெரிவிக்கும் கருவியே 'ஏர்டேக்'. அதுவே பயணப்பெட்டியைக் கண்டுபிடிக்க திரு ரீட்டுக்கு உதவியது.

பயணப்பெட்டியைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படும் கிரெய்க் நெல்சன் என்பவரை திரு ரீட் எதிர்கொண்டு பயணப்பெட்டியைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.