மலைப்பாம்பைக் கொண்டு வீதியில் சண்டையிட்ட ஆடவர் (காணொளி)

மலைப்பாம்பைக் கொண்டு வீதியில் சண்டையிட்ட ஆடவர் (காணொளி)

16 May 2023 - 6:40 pm

1 mins read

கனடாவில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.

டொரொன்டோவில் உள்ள தெருவில் ஆடவர் ஒருவர் தான் வளர்க்கும் மலைப்பாம்பை வைத்து மற்றொரு ஆடவரைத் தாக்கியுள்ளார்.

சம்பவம் மே 10ஆம் தேதி இரவு டன்டாஸ் ஸ்தீரிட் வெஸ்ட், மானிங் அவென்யூவில் நடந்தது.

சம்பவம் தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

காணொளியில் மலைப்பாம்பைக் கொண்டு ஆடவர் மற்றொரு ஆடவரைத் தாக்குவதும் அதன் பின்னர் காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவதும் பதிவாகியுள்ளது.

அதிகாரிகள் வந்தவுடன் பாம்பை கீழே விட்டுவிட்டு சரணடைவதும், பாம்பு அங்கிருந்து ஊர்ந்து செல்வதும் பதிவாகியிருந்தது.

பாம்பை வைத்து தாக்கிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல், விலங்கு துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்