பாலியல் வழக்கு: அமெரிக்காவால் தேடப்பட்டவர் மலேசியாவில் கைது

பாலியல் வழக்கு: அமெரிக்காவால் தேடப்பட்டவர் மலேசியாவில் கைது

1 mins read
c8dbb076-3d50-43fb-9482-d67d2cca5d5b
கைதுசெய்யப்பட்ட 28 வயது ஜொபைதுல் அமீன்மீது அலாஸ்காவில் குற்றம் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: அனைத்துலக அளவில் சிறார் பாலியல் சுரண்டல் கும்பல் ஒன்றை நடத்தியதாகக் கூறி, 2022 முதல் அமெரிக்க அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த பங்ளாதேஷியர் ஒருவர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

ஜொபைதுல் அமீன் என்ற அந்த 28 வயது ஆடவர் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் தடுத்துவைக்கப்பட்டு, பின்னர் வியாழக்கிழமை (மார்ச் 5) இரவு மலேசியாவிலிருந்து அலாஸ்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை (எஃப்பிஐ) இயக்குநர் கேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

அலாஸ்காவில் ஜொபைதுல்மீது குற்றம் சுமத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிக்கை வாயிலாகத் திரு பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்துலகச் சிறார் பாலியல் சுரண்டல் கும்பலை இயக்கியது தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்காக 2022 முதல் ஜொபைதுல் தேடப்பட்டு வந்தார்,” என்று அவர் சொன்னார்.

விசாரணைக்கும் ஜொபதுலைக் கைதுசெய்யயும் உதவிய மலேசிய அரசாங்கத்திற்கும் சட்ட அமலாக்கப் பங்காளிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்த வழக்கு மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்