நியூயார்க்கில் எதிரே வந்துகொண்டிருந்த ரயிலுக்கு முன் தள்ளிவிடப்பட்ட ஆடவர் உயிர் தப்பினார்

நியூயார்க்கில் எதிரே வந்துகொண்டிருந்த ரயிலுக்கு முன் தள்ளிவிடப்பட்ட ஆடவர் உயிர் தப்பினார்

1 mins read
49c42df3-2306-491c-9c0e-6913092a1d50
காயமடைந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும் பிறகு சீரானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: எக்ஸ் தளம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மென்ஹேட்டன் பகுதியில் ரயில் நிலையத் தளமேடையில் ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஆடவர், எதிரே வந்துகொண்டிருந்த ரயிலின் முன் தள்ளிவிடப்பட்டார்.

தண்டவாளத்தில் விழுந்த ஆடவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவம் அமெரிக்க நேரப்படி டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி அளவில் நிகழ்ந்தது.

ரயில் பெட்டிகளுக்கிடையிலிருந்து அந்த ஆடவரை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர்.

காயமடைந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும் பிறகு சீரானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த ஆடவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக 23 வயது ஆடவரான கமெல் ஹாக்கின்ஸ் கைது செய்யப்பட்டதாகவும் அவர்மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்