குடிநுழைவு விண்ணப்பங்களைத் தீவிரமாகச் சோதிக்கிறது அமெரிக்கா

குடிநுழைவு விண்ணப்பங்களைத் தீவிரமாகச் சோதிக்கிறது அமெரிக்கா

1 mins read
கள்ளக் குடியேற்றத்துக்கு எதிராக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் தொடர் நடவடிக்கை
2822e06e-8f54-4555-9d00-8d39d2b64180
2024ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் அமெரிக்கக் குடியுரிமைப் பிரமாணம் செய்துகொண்டவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வோர் கட்டாயமாகக் கூடுதல் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, அமெரிக்கக் குடியுரிமை, குடிநுழைவுச் சேவைக்கு (USCIS) வழங்கிய வழிகாட்டி நெறிமுறையில் இதன் விவரங்கள் வெளியிடப்பட்டன. விண்ணப்பதாரர்களின் பின்புலம் பற்றிக் கூடுதல் சோதனைகளைச் செய்யாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கவேண்டாம் என்று குடிநுழைவுச் சேவைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ் செய்தி ஊடகம் தெரிவித்தது.

“2026ஆம் ஆண்டு, ஏப்ரல் 27ஆம் தேதிமுதல், கைரேகையை அடிப்படையாகக் கொண்டு, மத்திய புலனாய்வுத் துறையின் (எஃப்பிஐ) அடுத்த தலைமுறை அடையாளம்காணும் செயல்முறைக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களும் யுஎஸ்சிஐஎஸ் பிரிவுக்குக் குற்றவியல் பின்புல விவரங்களுடன் அனுப்பிவைக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டதாகக் கடந்த வாரம் அப்பிரிவின் மின்னஞ்சலைப் பார்வையிட்ட ராய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டது.

அந்த மின்னஞ்சல், யுஎஸ்சிஐஎஸ் துறையின் அகதிகள், புகலிடம் நாடுவோருக்கான அனைத்துலக இயக்குநரக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த ஆண்டு (2025) பதவியேற்றதிலிருந்து, சட்டவிரோதமாக மக்கள் நாட்டுக்குள் வருவதை எதிர்த்து அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் குடிநுழைவுமீது கடுமையான போக்கைக் கடைப்பிடித்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்