தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனுலைஃப் 250 ஊழியர் ஆட்குறைப்பு: சொத்து, செல்வ மேலாண்மைப் பிரிவு பாதிப்பு

1 mins read
69b14e68-4d12-44b6-a39f-03133990b397
மனுலைஃப் நிதி நிறுவனத்தின் வர்த்தகச் சின்னம். - படம்: தி ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டொரன்டோ: மனுலைஃப் ஃபைனான்ஷியல் நிதி நிறுவனம், தனது சொத்து, செல்வ வளங்கள் மேலாண்மைப் பிரிவில் ஆட்குறைப்பு செய்துள்ளது. அதன்படி, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆகிய நாடுகளுடன் ஆசியாவில் இயங்கும் அலுவலகங்களில் உள்ள 250 ஊழியர்கள் பாதிப்படைவர்.

சொத்து மேலாண்மைச் சேவை வழங்கும் அனைவரையும் போலவே, 15 ஆண்டுகளில் முதல் முறையாக அதிக வட்டி விகிதங்களைக் கொண்ட ஏற்ற இறக்கங்கள் நிறைந்த சந்தையின் சுழற்சியை எதிர்கொண்டிருப்பதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி போல் லாரண்ட்ஸ் ஊழியர்களுக்கு அளித்த கடிதத்தில் கூறியிருந்தார்.

கனடாவில் பல நிதி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க, 2024ம் ஆண்டு நெருங்குவதற்குள் ஊழியர்களை பதவி நீக்கம் செய்துவருகின்றன.

குறிப்புச் சொற்கள்