பல தென்கொரிய சிறுவன்கள் பாலியல் குற்றங்கள் குறித்து புகாரளிப்பதில்லை

பல தென்கொரிய சிறுவன்கள் பாலியல் குற்றங்கள் குறித்து புகாரளிப்பதில்லை

1 mins read
வெளிப்படுத்தினால் சமுதாயம் தாழ்மையாகக் கருதலாம் என அச்சம்
b998724f-5906-4e78-9534-96501c14f7c5
பாதிக்கப்பட்ட பத்துபேரில் நான்கு தென்கொரிய ஆண் சிறுவர்கள் புகாரளிக்க முன்வருவதில்லை. - படம்: த நியூ பேப்பர்

சோல்: தென்கொரியாவில் ஏறத்தாழ 33.3 விழுக்காடு ஆண் சிறுவர்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளானாலும் அதனைப் பற்றி புகாரளிக்க முன்வருவதில்லை.

மேலும் அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக இருந்துவிடுகின்றனர் என்று சிறார்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் உள்ளுர் சமூக சேவை குழு மேற்கொண்ட அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாலின சமத்துவம் குறித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இடம்பெற்ற பொதுக் கருத்துக் கணிப்பில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளை மனித உரிமைக்கான இசிபிஏடி ( ECPAT) என்ற அனைத்துலக அமைப்பு வெளியிட்டது.

அதன் விவரங்களை தென்கொரிய குடும்ப, பாலின சமத்துவ அமைச்சு உறுதிப்படுத்தியது.

பதின்ம வயது சிறுவன்கள் உட்பட்ட சிறு வயது ஆண்களிடம் நடந்த ஆய்வில் 27 விழுக்காட்டினர் பிறரிடம் நடந்ததைச் சொல்வது ஆண்மைக்கு உகந்தது அல்ல எனவும் அப்படி வெளியில் சொன்னால் தாங்கள் உதவி நாடும் சக்தியிழந்த பலவீனம் ஆனவர்களாகக் கருதப்படுவர் என்றும் குறிப்பிட்டனர்.

தென்கொரியாவின் மின்னியல் குற்றங்களுக்கான ஆதரவு நிலையம் வழங்கியத் தரவுகளின்படி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண் சிறுவர்களின் எண்ணிக்கை 2023ல் 2,320 ஆக இருந்து 2025ல் 2,618 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மொத்த சிறுவர்களில் அது கால் விழுக்காடு எனவும் நிலையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
தென்கொரியாபாலியல்சிறுவர்குற்றம்ஆய்வுமனித உரிமைஅமைப்பு