நிக்கோசியா: சைப்ரஸ்மீது துருக்கி படையெடுத்து திங்கட்கிழமை (ஜூலை 20) 52 ஆண்டுகள் நிறைவடைந்தன.
1974ஆம் ஆண்டு துருக்கி, சைப்ரஸ்மீது படையெடுத்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டில் உள்ள கிரேக்க, துருக்கிய சமூகத்தினரிடையே அமைதியைக் கொண்டுவரும் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எடுத்துவருகிறது.
1974ல் துருக்கியப் படைகள் ஒரு மணிநேரத்துக்கு சைப்ரஸ்மீது படையெடுத்ததை நினைவுகூரும் வண்ணம் கிரேக்க சமூக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் திங்கட்கிழமை காலை விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி ஒலித்தது.
அதற்கு சில நாள்களுக்கு முன்பு கிரேக்கர்களின் ஊக்குவிப்பில் ராணுவம் சிறிது காலத்துக்கு ஆட்சியைக் கைப்பற்றியது.
அதேபோல், துருக்கிய சமூகத்தினர் உள்ள சைப்ரசின் வடக்குப் பகுதியிலும் திங்கட்கிழமை ராணுவக் கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டது. சைப்ரசிலிருந்து பிரிந்துள்ள அப்பகுதியை துருக்கி மட்டும்தான் அங்கீகரிக்கிறது.
இந்நிலையில், சைப்ரசின் இருதரப்புக்கும் இடையே அமைதியைக் கொண்டுவரும் முயற்சியை மீண்டும் தொடங்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இம்மாதம் 27லிருந்து 29ஆம் தேதி வரை சைப்ரசுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பல ஆண்டுகளாக இருதரப்புக்கும் இடையே ஆக்ககரமான பேச்சுவார்த்தை ஏதும் இடம்பெறவில்லை.

