பிரபல சஞ்சிகையான ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்டிரேட்டின் முகப்பு அட்டையில் 81 வயது மார்த்தா ஸ்டூவார்ட் நீச்சல் உடையில் உள்ள படம் இடம்பிடித்துள்ளது.
அந்த சஞ்சிகையின் வரலாற்றில் இவ்வளவு அதிக வயதான நபர் முகப்பு அட்டையில் வருவது இது முதல்முறை.
தொழில் முனைவராகவும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி படைப்பாளருமாக வேலை செய்து வந்த மார்த்தா பல்வேறு நீச்சல் உடைகளில் படமெடுக்கப்பட்டார்.
படபிடிப்பு டாமினிக்கன் ரிப்பப்ளிக்கில் நடந்தது.
பெண்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்ததாக மார்த்தா கூறினார்.
வயதையோ, உடலையோ, வரலாறுப் பற்றித் தாம் கவலைப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். வயதாகிவிட்டது என்று ஓரமாக நிற்க வேண்டாம் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என்றார் அவர்.
மார்த்தாவுக்கு முன்னர் சஞ்சிகையின் முகப்பு அட்டையில் ஆக வயதான நபரின் படமாக 74 வயது மேய் மஸ்கின் படம் இருந்தது. அவர் உலகின் ஆகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் உள்ள ஏலான் மஸ்கின் தாயார்.

