ராட்சத வளர்ப்பு மீன் தொட்டி உடைந்து வீதிவரை தண்ணீர் வழிந்து ஓடியது

ராட்சத வளர்ப்பு மீன் தொட்டி உடைந்து வீதிவரை தண்ணீர் வழிந்து ஓடியது

1 mins read
2f0ae2cf-eb26-404f-94d0-00ee2962afb4
படங்கள்: டுவிட்டர் -

ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள ராடிஸ்சன் புளூ ஹோட்டல் என்ற கட்டடத்தில் உள்ள 14 மீட்டர் உயர வளர்ப்பு மீன் கண்ணாடித் தொட்டி உடைந்து தண்ணீர் வீதிவரை வழிந்து ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொட்டி உடைந்து தண்ணீர் வெளியாவதாக தீயயைப்புப் படை டுவிட்டரில் தெரிவித்தது. சாலையில் அதிக அளவு தண்ணீர் ஓடியதாக போக்குவரத்து அலுவலகம் கூறியது. அந்தச் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

உருளை வடிவிலான அந்தத் தொட்டியில் ஒரு மில்லியன் லிட்டருக்கும் அதிக தண்ணீர் இருந்தது. சுமார் 1,500 வெப்ப மண்டல மீன்கள் வளர்க்கப்பட்டன.

அதன் நடுவே கண்ணாடிக் கூண்டு ஒன்று மின்தூக்கி போல் மேலும் கீழும் போய்வரும். அதில் சென்று பார்வையாளர்கள் மீன்களை ரசிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்