ஹவாயி: ஹவாயி தீவின் மாவி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாண்டோரின் எண்ணிக்கை திங்கட்கிழமை 99ஐ எட்டியது. காணாமல்போன 100க்கும் மேற்பட்டோரை மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.
உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களை உயிருடன் மீட்கும் நம்பிக்கையில் தீவிரமான தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்றிலும் எரிந்துபோயிருக்கும் லஹைனா நகரில் மீட்புப் பணி 25 விழுக்காடு முடிந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டுத் தீ மூண்டு சில நாள்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆங்காங்கே திடீரென எழும் தீச்சம்பவங்களுக்கு எதிராகப் போராடுகின்றனர்.