தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொழில்நுட்பக் கோளாற்றால் சேவைத்தடை; மன்னிப்பு கேட்டுக்கொண்ட மெக்டோனல்ட்ஸ்

1 mins read
ee60fd00-4866-4895-981f-11a7f90d431c
மார்ச் 15ஆம் தேதி சிட்னியின் மாருப்ரா பகுதியில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் நுழைவாசலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு. - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: ஆசியா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் தனது உணவகங்களில் உணவு வாங்குவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் கூறியதைத் தொடர்ந்து, மெக்டோனல்ட்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசியாவில், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், சீனா, ஹாங்காங் ஆகியவற்றைப் பாதித்த அந்தச் சேவைத் தடையால், சில உணவகங்கள் இணையத்தில் உணவு வாங்கும் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தவேண்டி இருந்தது.

வேறு சில உணவகங்கள் முற்றிலும் மூடப்பட்டன.

உலகளவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று மெக்டோனல்ட்ஸ் தெரிவித்தது.

கோளாறு உடனடியாக அடையாளம் காணப்பட்டு சரிசெய்யப்பட்டதாக மெக்டோனல்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைத் தகவல் அதிகாரி பிரையன் ரைஸ் கூறினார்.

தொழில்நுட்பக் கோளாறு, இணையப் பாதுகாப்புக் காரணங்களால் ஏற்படவில்லை என்றார் அவர்.

செயல்பாட்டு மாற்றத்தின்போது மூன்றாம் தரப்பு சேவை நிறுவனம் ஒன்றால் அது ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்