நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அங்கு மெக்டானல்ட்ஸ் உணவகம் இருப்பதை அனேகமாக காணலாம். ஒவ்வொரு நாட்டிலும் மெக்டானல்ட்ஸ் உணவகங்களில் உணவுப் பட்டியல் (menu) மாறுபடலாம்.
ஆனால், ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் உள்ள ஒரு மெக்டானல்ட்ஸ் கிளையில், அமர்வதற்கே போதிய இடவசதி இல்லாத இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
டுவிட்டர் பயனாளர் ஒருவர், அந்த இருக்கைகளைக் காட்டும் படத்தை மார்ச் 11ஆம் தேதி பதிவிட்டார்.
"என்ன இருக்கை இது? உட்காருவதற்கே வசதியில்லை," என்று அவர் கூறினார்.
இது குறித்து பதிலளித்த மெக்டானல்ட்ஸ் ஜப்பான் பேச்சாளர் ஒருவர், இந்த இருக்கைகள் உணவகத்தில் அதிக இடத்தை அடைத்துக்கொள்ளாது என்பதால் இவை பொருத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

