சிலாங்கூர் அரசு ஊழியர்களிடையே மருத்துவ விடுப்பு 30% குறைந்தது

சிலாங்கூர் அரசு ஊழியர்களிடையே மருத்துவ விடுப்பு 30% குறைந்தது

1 mins read
0fdd94a6-8a32-4f80-9336-e1bf97c6339c
சிலாங்கூரில் தற்போது 390 அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். - படம்: குளூக்

ஷா அலாம்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பது 30 விழுக்காடு குறைந்துள்ளது.

வீட்டிலிருந்தபடி வேலை பார்க்கும் ஏற்பாட்டை மாநில அரசாங்கம் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி செயல்படுத்தியது. அதிலிருந்து அவர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பது குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் தற்போது 390 அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பணிகள் ஆக்ககரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று சிலாங்கூர் முதல்வர் அமிருதின் ‌ஷாரி கூறினார்.

புள்ளிவிவரம்

இதர அரசு ஊழியர்களில் 284 பேர் வேலையிடத்திலிருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிப்பதால் அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாட்டுக்குத் தகுதிபெறமாட்டார்கள் என்று திரு அமிருதின் குறிப்பிட்டார். எஞ்சிய 109 ஊழியர்கள், அவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் காரணமாக வேலையிடத்தில் இருக்கவேண்டியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

செலவு குறைந்தது

“இந்த ஏற்பாடு செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்காகவே ஏதேனும் காரணத்தைக் கூறி வந்ததாகத் தகவல் வந்தது.

“வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடு செயல்படுத்தப்பட்டதிலிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ஏற்படும் செலவு குறைந்துள்ளது,” என்று திரு அமிருதின், புதன்கிழமை (ஏப்ரல் 29) சிலாங்கூர் சட்டமன்ற அமர்வின்போது கூறினார்.

குறிப்புச் சொற்கள்