மருந்துப்பொருள் விநியோகம் சீராக உள்ளது: மலேசிய சுகாதார அமைச்சு

மருந்துப்பொருள் விநியோகம் சீராக உள்ளது: மலேசிய சுகாதார அமைச்சு

1 mins read
65877b7d-3561-4c70-800e-57d058d49c60
உள்நாட்டில் மருந்துப்பொருள் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: தி எட்ஜ்

கோலாலம்பூர்: மலேசியாவில் மருந்துப்பொருள் விநியோகம் சீராகவும் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருக்கிறது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய விநியோக மதிப்பீட்டின்படி, மத்திய கிழக்குப் போரானது மருந்துப்பொருள் விநியோகத்தில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என்று திங்கட்கிழமை (மார்ச் 23) ஓர் அறிக்கைமூலம் அமைச்சு பொதுமக்களுக்கு உறுதியளித்தது.

“பயன்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில், ஒன்று முதல் மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துப்பொருள்கள் சுகாதார நிலையங்களில் உள்ளன.

“ஒப்பந்த ஏற்பாடுகளின்மூலம் கூடுதலாக இரு மாதங்களுக்கான மருந்துப்பொருள்கள் இருப்பில் உள்ளன,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் மருந்துப்பொருள் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.

மருந்துப்பொருள் விநியோகத்தில் இடையூறு இருப்பதாக இதுவரையிலும் புகார்கள் வரவில்லை என்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சு தெரிவித்தது.

“மூன்று மாதங்கள் வரைக்குமான மூலப்பொருள்களும் இரு மாதங்களுக்குத் தேவையான மருந்துப்பொருள்களும் உள்ளூர் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிடம் உள்ளன.

“இறக்குமதியாளர்கள் தங்களது விநியோகச் சங்கிலியைக் கண்காணித்து வருகின்றனர். அதுபோல், அமைச்சும் மத்திய கிழக்குச் சண்டையைத் தொடர்ந்து கண்காணிக்கும்,” என்றும் அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்