கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ள நாய்

கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ள நாய்

1 mins read
08bc2122-6741-443b-86db-11c0d178bf7c
இந்த நாய்க்குப் பணிவிடை செய்ய 27 பேர் உள்ளனர். - படங்கள்: குந்தர் VI/இன்ஸ்டகிராம்

இத்தாலியைச் சேர்ந்த குந்தர் எனும் ஜெர்மன் ஷெப்பர்ட், உலகின் ஆகப் பெரிய பணக்கார நாயாகக் கருதப்படுகிறது. இதன் சொத்து மதிப்பு ஏறக்குறைய 400 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.3,300 கோடி) என அறியப்படுகிறது.

இதன் பெயரில் சொந்த கப்பலும் தனி விமானமும் உள்ளனவாம். இதற்குப் பணிவிடை செய்ய 27 பேர் உள்ளனர்.

1992ல் கொர்லோட்டா எனும் பெண், தமக்கு வாரிசு இல்லாததால், மொத்த சொத்தையும் நாயின் பெயருக்கு எழுதி வைத்தார். சொகுசு வாழ்க்கை வாழும் இந்த நாயின் சொத்துகளை நிர்வகிக்க அறங்காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெட்ஃபிளிக்சில் இந்த நாயின் வாழ்க்கைமுறை குறித்து ஆவணப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ‘பணம்தான் பலம்’ என இயங்கும் உலகில், இனி விலங்குகளுக்கு ராஜா சிங்கம் இல்லை, இந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்தான்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்