அண்மைய மெர்டேக்கா மையத்தின் இளையர் ஆய்வு 2024ன் படி, ஆய்வில் பங்கேற்ற சீனர்கள், இந்தியர்களில் 58 விழுக்காட்டினர் தங்கள் சமூகங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். இந்த விகிதம் கடந்த ஆண்டில் 43 விழுக்காடாக இருந்தது.
மலேசியாவில் நடந்து வரும் இனவாத இயக்கவியல், குறிப்பாக இந்தியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு, மலாய்க்காரர்களிடையே உள்ள இனங்களுக்கு இடையேயான அவநம்பிக்கை பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை ஆய்வு வெளிப்படுத்தியது.
இந்த சமூகப் பிரச்சினைகளில் மலேசிய இளையர்கள் முன்னணியில் இருப்பதால், இந்த கண்டுபிடிப்புகள், இனங்களுக்கிடையிலான புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் முயற்சிகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியர்கள் எதிர்கொள்ளும் அதிகமான பாகுபாடு
ஆய்வின்படி, இந்திய சமூகத்தினர் மலேசிய சமூகத்திற்குள் தொடர்ந்து ஒதுக்கப்பட்டதாக உணர்கிறார்கள். 62 விழுக்காட்டு இந்தியர்கள் தாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் பாகுபாடு காட்டப்படுவதாகவும் தெரிவித்தனர். 28 விழுக்காட்டினர் மட்டுமே நியாயமாக நடத்தப்படுவதாகக் கூறினர்.
“இது ஒரு தொடர்ச்சியான போக்கு. தங்கள் சமூகம் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாக உணரும் 57 விழுக்காட்டு சீனர்களுடனும், தாங்கள் நியாயமாக நடத்தப்படுவதாக கருதும் 40 விழுக்காட்டினருடன் ஒப்பிடும்போது, இது கடுமையாக முரண்படுகிறது என்று மெர்டேக்கா மையத்தின் இணை நிறுவனர் மற்றும் நிகழ்ச்சிகள் இயக்குநரான இப்ராகிம் சுஃபியான் கருத்துரைத்தார்.
மலாய்க்காரர்களிடையே இனங்களுக்கு இடையிலான நம்பிக்கை 75 விழுக்காடாக உள்ளது. சீன மற்றும் சீனர்களின் நம்பிக்கை விகிதம் 95 விழுக்காடாகவும் இந்தியர்களின் நம்பிக்கை விகிதம் 85 விழுக்காடாகவும் உள்ளன.
மலாய்க்காரர்கள் மற்ற இனங்களின் மீது குறைவான நம்பிக்கை வைத்திருப்பதை ஆய்வு காட்டுகிறது. சீனர்கள் மீதான நம்பிக்கை 57 விழுக்காடாகவும், இந்தியர்கள் மீதான நம்பிக்கை 53 விழுக்காடாகவும் உள்ளது. மற்றொரு புறம், சீனர்கள் மலாய்க்காரர்களிடம் வைத்துள்ள நம்பிக்கை விகிதம் 92 விழுக்காடாகவும், இந்தியர்கள் மலாய்க்காரர்களிடம் வைத்துள்ள நம்பிக்கை விகிதம் 83 விழுக்காடாகவும் உள்ளது. அதே சமயம் மலாய்க்காரர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் 83 விழுக்காடு அதிகமாக சீனர்களை நம்புகிறார்கள். மலாய்க்காரர்கள் சீனர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை விகிதம் 79 விழுக்காடாக உள்ளது.
மலாய்க்காரர்கள் மற்ற இனத்தவர்களிடம் கொண்டுள்ள நம்பிக்கை குறைவாக இருப்பது ஆய்வில் முக்கியமாக தெரிய வந்துள்ளது. மலாய்க்காரர்களில் 57 விழுக்காட்டினர் சீன சமூகத்தை நம்பவில்லை என்றும், 53 விழுக்காட்டினர் இந்தியர்கள் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பிற இனக்குழுக்களைப் பிரதிநிதிக்கும் 18-30 வயதுடைய 1,605 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.