தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வாட்ஸ்அப்’பில் மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தும் ‘மெட்டா’

1 mins read
46ca9935-ea7b-4f45-a665-62a98f70bbfb
இந்தப் புதிய மொழிபெயர்ப்புச் சேவை ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆறு மொழிகளிலும் ஐஃபோன்களில் 19 மொழிகளிலும் முதலில் அறிமுகப்படுத்தப்படும். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: மூன்று பில்லியனுக்கும் அதிகமான தமது பயனர்களுக்குப் பயனளிக்கும் வகையில், ‘வாட்ஸ்அப்’ சேவைக்கு மொழிபெயர்ப்பு அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக ‘மெட்டா’ நிறுவனம் செப்டம்பர் 23ஆம் தேதி அறிவித்தது.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் தமது பயனர்களின் அரட்டைகளை எளிதாக்குவதற்காக இந்தப் புதிய அம்சத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதாவும் அந்நிறுவனம் கூறியது.

இந்தப் புதிய மொழிபெயர்ப்புச் சேவை ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஆறு மொழிகளிலும் ஐஃபோன்களில் 19 மொழிகளிலும் முதலில் அறிமுகப்படுத்தப்படும்.

அதைத் தொடர்ந்து மேலும் பல மொழிகளுக்கு அச்சேவை விரிவுபடுத்தப்படும்.

“உங்கள் அரட்டைகளில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த மொழிபெயர்ப்பு அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான், உங்கள் சாதனத்தில் ‘வாட்ஸ்அப்’ கூட அவற்றைப் பார்க்க முடியாத வகையில் இந்தப் புதிய அம்சம் செயல்படுகிறது,” என ‘மெட்டா’ வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்தது.

பயனர்கள் செய்தியை நீண்ட நேரம் அழுத்தி, “மொழிபெயர்ப்பு” என்பதைத் தட்டினால், ‘வாட்ஸ் அப்’ பில் உள்ளீடு செய்யப்பட்ட மொழிகளில் அவர்கள் விரும்பும் மொழியில் அச்செய்தியைப் பார்க்கலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்