சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றின் நீதிபதி, 727 மில்லியன் டாலரை (933 மில்லியன் வெள்ளி) அந்த மாநிலத்திடம் செலுத்துமாறு மெட்டா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மெட்டா பொதுமக்களுக்குத் தொந்தரவு இழைத்ததாகவும் சிறாருக்கு ஆபத்து விளைவித்ததாகவும் நியூ மெக்சிகோ குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அந்தத் தீர்ப்பு விதிக்கப்பட்டது.
தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மெட்டா, அறிக்கை மூலம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.


