மெட்டா வெற்றி; ஏகபோக உரிமையைப் பெறவில்லை என நீதிமன்றம் தீர்ப்பு

1 mins read
76d52998-693c-4998-983a-3487327fa59d
‘மெட்டா’ நடத்திய ஐந்தாண்டுச் சட்டப் போராட்டத்திற்கு அத்தீர்ப்பு முடிவாக அமைந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ‘மெட்டா’ நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு அந்நிறுவனத்திற்கு சாதமாக அமைந்தது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) விசாரணைக்கு வந்த அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி, ‘இன்ஸ்டகிராம்’, ‘வாட்ஸ்அப்’ ஆகிய இரு சமூக ஊடகங்களைக் கையகப்படுத்தியதால் ‘மெட்டா’ சட்டவிரோதமாக ஏகபோக உரிமைகளைப் பெறவில்லை எனத் தீர்ப்பளித்தார்.

போட்டி நிறுவனமான இன்ஸ்கிராமை 2012ஆம் ஆண்டும் வாட்ஸ்அப்பை 2014ஆம் ஆண்டும் ‘மெட்டா’ கையகப்படுத்தியது.

அதன்மூலம் சட்டவிரோதமாக ஏகபோக உரிமையை அந்நிறுவனம் பெற்றதாக அமெரிக்க அரசாங்க நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

ஐந்து ஆண்டுகள் நடந்த அவ்வழக்கில் ‘மெட்டா’வுக்கு மாபெரும் வெற்றி கிட்டியுள்ளது.

சமூக ஊடகச் சந்தையில் ‘டிக்டாக்’, ‘யூடியூப்’ ஆகிய நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டியை ‘மெட்டா’ திர்கொள்கிறது. அதனால், அது எந்தவொரு ஏகபோக அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என நீதிபதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்