தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏலத்தில் 6.8 மில்லியன் வெள்ளிக்கு விலைபோன விண்வீழ்கல்

1 mins read
a8c3cfb9-aab4-4e88-8d07-bd57f7ebd95d
என்டபிள்யுஏ 16788 எனப் பெயரிடப்பட்ட இந்தக் கல், நவம்பர் 2023ல் சஹாரா பாலைவனத்திலுள்ள நைஜரின் அகாடெஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.  - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோ விண்வீழ்கல் (meteorite), சோத்பீஸ் சொகுசு ஏலத்தளத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு (6.8 மி. வெள்ளி) விற்கப்பட்டது. 

‘என்டபிள்யுஏ 16788’ என்ற அந்தக் கல்லுக்கான ஏலத்தில் இணைய, கைபேசிப் பயனாளர்கள் பங்குபெற்றனர். ஏலம் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீடித்தது. 

செவ்வாய் கிரகத்திலிருந்து உடைந்த அருமையான விண்வீழ்கல் இது, என்று சோத்பீஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசென்டரா ஹெட்டன் தெரிவித்தார்.

நவம்பர் 2023ல் அந்தக் கல், சஹாரா பாலைவனத்திலுள்ள நைஜரின் அகாடெஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதில் ஏதோ சிறப்பு இருப்பதை அங்குள்ள மக்கள் அறிந்திருந்தனர்.  இது செவ்வாய்க் கோளைச் சேர்ந்தது என்றும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செவ்வாய்க்கோளின் ஆகப் பெரும் துண்டு என்றும் தெரிய வந்தது, என்று திருவாட்டி கெசேண்ட்ரா கூறினார்.

“கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான இந்த வீழ்கல், பெருங்கடலுக்குப் பதிலாகப் பாலைவனத்தின் நடுவே விழுந்தது அதிசயம். அத்தகைய கல், கண்டுபிடிக்கக்கூடிய இடத்தில், அதனை அடையாளம் காணும் வகையில் அவ்வாறு கிடைக்கப்பட்டது அற்புதமானது,” என்று அவர் கூறினார்.

செவ்வாய்க் கோளைப் போன்றே, ‘என்டபிள்யுஏ 16788’ செந்நிறத்தில் காணப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்