சாதனை அளவை ஒட்டித் தொடரும் எரிசக்தித் துறையின் மீத்தேன் வெளியேற்றம்

சாதனை அளவை ஒட்டித் தொடரும் எரிசக்தித் துறையின் மீத்தேன் வெளியேற்றம்

1 mins read
39383c78-7d79-4217-8891-9b2e31d860e7
மத்திய கிழக்கில் நடக்கும் போர் எரிசக்தி விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், இந்த மீத்தேன் வெளியேற்றத்தைக் கையாள்வதன் மூலம் பில்லியன் கணக்கான கன மீட்டர் எரிவாயுவை அனைத்துலகச் சந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியும் என்றும் இதுவே தற்போதைய முக்கிய முன்னுரிமை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பாரிஸ்: 2025ஆம் ஆண்டில் எரிசக்தித் துறையின் மீத்தேன் வெளியேற்றம் ஏறக்குறைய சாதனை அளவிலேயே தொடர்வதாக, அனைத்துலக எரிசக்தி அமைப்பு திங்கட்கிழமையன்று (மே 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நடக்கும் போர் எரிசக்தி விநியோகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், இந்த மீத்தேன் வெளியேற்றத்தைக் கையாள்வதன் மூலம் பில்லியன் கணக்கான கன மீட்டர் எரிவாயுவை அனைத்துலகச் சந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியும் என்றும் இதுவே தற்போதைய முக்கிய முன்னுரிமை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

“எரிசக்தித் துறையின் மீத்தேன் வெளியேற்றம் சாதனை அளவை ஒட்டியுள்ள நிலையில், பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆண்டுதோறும் 200 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவைகப் பெற முடியும்,” என்று குளோபல் மீத்தேன் டிராக்கர் 2026 அறிக்கை தெரிவித்துள்ளது.

“உபரியாக எரிவாயு ஏற்றுமதி செய்யும் திறன் கொண்ட குறிப்பிட்ட நாடுகளும், இறக்குமதி செய்யும் நாடுகளும் அவற்றின் எரிவாயு அமைப்புகளில் எளிதில் அணுகக்கூடிய மீத்தேன் தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தினால், ஏறக்குறைய 15 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை மிக விரைவாக சந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய முடியும்,” என்று அது கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்