மெக்சிகோ சிட்டி: பேரளவில் கடத்தப்பட்ட போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருப்பதாக மெக்சிகோ கடற்படை அக்டோபர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.
மெக்சிகோவின் தென்மேற்குக் கடற்பகுதியில் ஏறத்தாழ 8,400 கிலோ போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதுவே மெக்சிகோ கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிகமான போதைப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
8,700 லிட்டர் எரிபொருள், ஆறு படகுகள் ஆகியவற்றையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு குறைந்தது 2 பில்லியன் பெசோஸ் (S$131 மில்லியன்) என்று அதிகாரிகள் கூறினர்.