ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மஇகா போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி

ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மஇகா போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி

1 mins read
503b0e4d-b7bd-4b90-bc37-093b2f21e52d
ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) உறுப்பினர்கள். - படம்: பெர்மானா

கோலாலாம்பூர்: ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணி சார்பில் களமிறங்கிய மஇகாவின் நான்கு வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்,

கெமெலா தொகுதியில் கே.ரவின் குமார், கஹாங் தொகுதியில் ருகேந்திரன், பெர்லிங் தொகுதியில் பன்னீர் செல்வம், புக்கிட் பத்து தொகுதியில் ஆர்.குமரன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

இது மஇகாவுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.

இது கடந்த கால அதிருப்திகளை மறந்து, ஒரு வாய்ப்பை மஇகாவுக்கு இந்தியச் சமூகம் வழங்கியிருப்பதைக் காட்டுகிறது. அதனை நல்ல முறையில் மஇகா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் பொறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று கட்சியின் தேசியத் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இவ்வெற்றி கட்சிக்குப் புது தெம்பைத் தந்திருக்கும் அதேவேளையில் இது கூடுதல் பொறுப்பு.

வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்த இரு தொகுதிகளில் கணிசமான அளவு சீனர்களும் இந்தியர்களும் உள்ளனர். இது தாங்கள் முறையாக சேவையாற்ற வேண்டிய சவாலையும் கொண்டு வருவதாக விக்னேஸ்வரன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஜோகூர்சட்டமன்றத் தேர்தல்மஇகாவெற்றி