சியாட்டில்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகளை இவ்வாரத் தொடக்கத்தில் வீழ்ச்சி காண செய்த சீனாவின் புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மென்பொருள் நிறுவனமான டீப்சீக்கைப் புகழ்ந்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்ய நாதெல்லா.
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆட்டம் காணவைத்த ‘ஓப்பன்ஐ’ இன் ‘டீப்சீக்-ஆர்1’ பதிப்பை அனைவரும் இலவசமாக அணுகக்கூடிய வகையில் ‘டீப்சீக்’ நிறுவனம் கட்டமைத்திருந்தது.
பல பில்லியன் டாலர் செலவில் மேற்கத்திய தொழில்நுட்பத்தில் உருவான ‘ஏஐ’யை இது விஞ்சியது.
இந்நிலையில், உண்மையில் ‘டீப்சீக்’ மென்பொருளில் சில புத்தாக்கங்கள் உள்ளன எனத் திரு நாதெல்லா ஜனவரி 29ஆம் தேதி நடந்த மைக்ரோசாஃப்ட் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் காலாண்டு நிலவரத்தை அறிவித்த பிறகு கூறினார்.