தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலைகளைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு மூலம் யுஎஸ் 600 மில்லியன் சேமித்த மைக்ரோசாஃப்ட்

1 mins read
bd6f2191-21fb-4394-ac62-31ba85a15e9b
மைக்ரோசாஃப்டின் புதிய தயாரிப்புகளுக்கான குறியீட்டில் 35 விழுக்காட்டை ஏஐ உருவாக்குகிறது, அறிமுகங்களை விரைவுபடுத்துகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது.

இந்த வாரம் இடம்பெற்ற விளக்கக்காட்சியின்போது, நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி ஜூட்சன் அல்தோஃப், விற்பனை, வாடிக்கையாளர் சேவை முதல் மென்பொருள் பொறியியல் வரை அனைத்திலும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் உற்பத்தியை அதிகரிக்கின்றன என்று கூறியுள்ளதாக விவரம் அறிந்த ஒருவர் தெரிவித்ததாக ஃபுளும்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் 2024ல் மைக்ரோசாஃப்டின் அழைப்பு மையங்களில் மட்டும் யுஎஸ் 500 மில்லியன் டாலருக்கும் (640 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அதிகமாக சேமித்ததாகவும், ஊழியர், வாடிக்கையாளரின் திருப்தியையும் அதிகரித்ததாகவும் திரு அல்டோஃப் கூறியுள்ளார்

சிறிய வாடிக்கையாளர்களுடனான தொடர்புகளைக் கையாள செயற்கை நுண்ணறிவை நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. தொடக்கநிலையிலேயே பல மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

புதிய தயாரிப்புகளுக்கான குறியீட்டில் 35 விழுக்காட்டை ஏஐ உருவாக்குகிறது, அறிமுகங்களை விரைவுபடுத்துகிறது என்றும் திரு அல்டோஃப் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்