நடுவானில் மோதிய விமானங்கள்: நால்வர் பலி

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இரண்டு சிறிய விமானங்கள் இன்று (பிப்ரவரி 19) நடுவானில் மோதிக்கொண்டதை அடுத்து நான்கு பேர் உயிரிழந்தனர்.  

இரட்டை எஞ்சின்கள் கொண்ட அந்த இரு விமானங்களிலும் தலா ஒரு பயணியும் ஒரு விமானியும் இருந்தனர்.

விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் அதில் இருந்த நால்வரும் உயிரிழந்தனர். விமானங்களின் உடைந்த பாகங்கள் விபத்து நிகழ்ந்த இடத்துக்கருகே சிதறிக் கிடந்தன.

இரு விமானங்களும் அந்தப் பகுதியில் சட்ட வரையறைகளுக்குட்பட்டுதான் பறந்தன என்று குறிப்பிட்ட போலிசார், இரு விமானங்களும் ஒரே நேரத்தில், ஒரே நேர்கோட்டில் எதிரெதிர்த் திசையில் பறந்ததற்கான காரணம் தெரியவில்லை என்றனர்.

விபத்துக்துள்ளான விமானங்களில் ஒன்று எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. மெல்பர்ன் போலிசார் விபத்து குறித்து விசாரணை நடத்துகின்றனர்.

#தமிழ்முரசு #விமானம் #ஆஸ்திரேலியா