தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய கிழக்கு பதற்றம்: எண்ணெய் விலைகள் தொடர்ந்து ஏற்றம்

1 mins read
ac61f634-03d4-428e-b3b9-4de859384865
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு மத்திய கிழக்கில் நடைபெறுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர்: மத்திய கிழக்கில் விநியோக ஆபத்துகளை எண்ணெய் வர்த்தகர்கள் எதிர்நோக்குவதன் காரணமாக சிங்கப்பூரில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் (அக்டோபர் 3) எண்ணெய் விலைகள் ஏற்றம் கண்டன.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருவதன் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அந்த அச்சம் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.2 விழுக்காடு ஏற்றம் கண்டு US$74.80க்கு அதிகரித்து உள்ளது. அமெரிக்கச் சந்தையில் 1.4 விழுக்காடு உயர்ந்து US$71.05 ஆனது.

ஈரான் மட்டுமின்றி காஸா, லெபனான் மற்றும் ஏமனில் இருந்தும் இஸ்ரேல் தாக்குதலை எதிர்நோக்கி உள்ளதால் ஓராண்டுக்குப் பிறகு மத்திய கிழக்கில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

அது எண்ணெய்ச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். காரணம், உலக எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரானில் உள்ளது.

எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டாலும் எண்ணெய் விநியோக வழிகள் அடைக்கப்பட்டாலும் பாதிப்பு அதிகரிக்கும் என்று எண்ணெய் வர்த்தகர்கள் கலைப்படுகின்றனர்.

ஈரான் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது. இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தினால், அந்த விநியோகம் முற்றாக பாதிக்கப்படும். அதன் காரணமாக, எண்ணெய் விலைகள் தாறுமாறாக உயரக்கூடும் என்பதும் அவர்களின் கலையாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்