வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானுடனான சண்டைநிறுத்த உடன்பாட்டைக் காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு காலாவதியாவதற்குச் சில மணிநேரம்முன் ஏப்ரல் 21ஆம் தேதி உடன்பாட்டை நீட்டிப்பதாகத் திரு டிரம்ப் சொன்னார்.
உலகப் பொருளியலை உலுக்கியதுடன் பல்லாயிரம் பேரைப் பலிவாங்கிய மத்திய கிழக்குப் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையை அமெரிக்காவும் ஈரானும் தொடர, திரு டிரம்ப்பின் அறிவிப்பு வகைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கலந்துரையாடல்களில் உதவிசெய்த பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஏற்ப சண்டைநிறுத்த உடன்பாட்டை நீட்டித்ததாகத் திரு டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
எனினும், திரு டிரம்ப்பின் முடிவை ஈரானோ இஸ்ரேலோ ஏற்றுக்கொண்டுள்ளனவா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

