பாகிஸ்தானில் போராளிகள் தாக்குதல், காவல்துறையினர் 10 பேர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தானில் போராளிகள் தாக்குதல், காவல்துறையினர் 10 பேர் கொல்லப்பட்டனர்

1 mins read
afd5b053-1c14-41ad-b2e7-f3dde1e4d51d
சில மணி நேரம் நீடித்த சண்டையில் அதிகாரிகள் பத்துப் பேருடன் தாக்குல்காரர்கள் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - சித்திரிப்பு: பிக்சாபே

டெரா இஸ்மாயில் கான்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இஸ்லாமியப் போராளிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தியதாகவும் தாக்குதல்காரர்கள் பதுங்கியிருந்து திடீரெனத் தாக்கியதாகவும் காவல்துறை கூறியது. ஒருவாரகாலத்தில் நடந்த அத்தகைய இரண்டாவது தாக்குதல் அது.

ஆஃப்கானிய எல்லையில் அமைந்துள்ள ஹங்கு மாவட்டத்தில் புதன்கிழமை (ஜூலை 29) பின்னேரம் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த வட்டாரம் நெடுங்காலமாகப் போராளிக் குழுக்களின் உறைவிடமாக விளங்குகிறது.

அண்மைய மாதங்களில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக, ராணுவத்தினரையும் காவல்துறையினரையும் குறிவைத்து அத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

போராளிகள் ஆஃப்கானிஸ்தானில் பாதுகாப்பாகத் தங்கி, பயிற்சி எடுத்து, பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தச் சதித்திடங்களைத் தீட்டுவதாகப் பாகிஸ்தான் சாடுகிறது.

அதை மறுக்கும் தலிபான் அரசாங்கம் போராளிகளின் தாக்குதல் பாகிஸ்தானி உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறுகிறது.

புதன்கிழமை காவல்துறை சோதனைச் சாவடியைத் தாக்கிய போராளிகள் வெடிபொருள்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. சில மணி நேரம் நீடித்த சண்டையில் அதிகாரிகள் பத்துப் பேருடன் தாக்குல்காரர்கள் 15 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய மாதங்களில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நடந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொற்றுப்பேற்றுக்கொள்ளவில்லை.

குறிப்புச் சொற்கள்
பாகிஸ்தான்தாக்குதல்ஆளில்லா வானூர்திகாவல்துறைஅதிகாரி