இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிதி; குழப்பத்தில் அமெரிக்கத் தூதர்

இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிதி; குழப்பத்தில் அமெரிக்கத் தூதர்

படம்: ராய்ட்டர்ஸ்

25 Nov 2026 - 11:41 am

1 mins read

டெல் அவிவ்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கும் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் (S$4.91 பில்லியன்) ராணுவ உதவி நிதி 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறுத்தப்படுவது தொடர்பில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவில் நடந்த இடைத்தவணைத் தேர்தலின்போது, இஸ்ரேலுக்கு வழங்கும் 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் ஒப்பந்தம் செய்ததாக அதிபர் டோனல்ட் டிரம்ப் திடீரென அறிவித்தார். இஸ்ரேலுக்கு இனி அமெரிக்க நிதி தேவையில்லை என்றார் அவர்.

இந்நிலையில், அத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கைப்பற்றினர். டிரம்ப் கட்சி படுதோல்வி அடைந்தது.

அமெரிக்க ஆயுதங்களை வாங்க 2028ஆம் ஆண்டுவரை இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கும் புரிந்துணர்வுக் குறிப்பு நடைமுறையில் உள்ளது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) டெல் அவிவ் மாநாட்டில் பேசிய திரு ஹக்கபி, “புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் ஈராண்டுகள் தொடர வேண்டியுள்ளதால் இவ்வாண்டு இறுதியில் உதவி திடீரென நிறுத்தப்படும் என உறுதியாகக் கூற முடியாது,” என்றார்.

நாடாளுமன்ற ஒப்புதலின்றி நிதியை நிறுத்த முடியுமா என்பதும் தெளிவாகவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

காஸா போர், ஈரான் போர் ஆகியவற்றால் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கான மக்கள் ஆதரவு சரிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்