மின்வெட்டால் பிலிப்பீன்ஸில் மில்லியன் கணக்கில் மக்கள் பாதிப்பு

மின்வெட்டால் பிலிப்பீன்ஸில் மில்லியன் கணக்கில் மக்கள் பாதிப்பு

1 mins read
ஒருமணி நேர மின்வெட்டு, படிப்படியாகப் பலபகுதிகளில் அமலாக்கு வரும்
647cced0-4084-488b-9577-1f56ad095b85
தலைநகர் மணிலாவில் நடைபெறும் கட்டுமானப் பணிகள். - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்ஸில் வெள்ளிக்கிழமை (மே 15) பரவலாக மின்வெட்டு நடப்புக்கு வந்ததால் மில்லியன் கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி வெப்பமான சூழலில் தவித்தனர்.

பிலிப்பீன்ஸ் தேசியக் கூட்டுறவு மின்வாரியம் (NGCP) தலைநகர் மணிலாவிலும் பிரதானத் தீவான 116 மில்லியன் மக்கள் வாழும் லுசோனிலும் மதிய வேளையில் சுழற்சி முறையில் ஒரு மணி நேர மின்வெட்டை அமல்படுத்தியது. படிப்படியாக மின்வெட்டு நாட்டின் மற்ற மத்தியப் பகுதிகளுக்கும் நடப்புக்கு வரும் என்று வாரியம் தெரிவித்தது.

முக்கிய மின்அமைப்புகளில் ஏற்பட்டத் தடங்கல்களே பல பகுதிகளில் நிலவிய மின்வெட்டுக்கான காரணம் என்று வாரியம் விளக்கியது. அவை விநியோகத்துக்கான மின்கம்பி வடங்களையும் பாதித்தது.

மேலும் முக்கியமான பெரிய மின்நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் அவை செயல்படவில்லை என்று வாரியமும் எரிசக்தி அமைச்சும் கூட்டாகத் தெரிவித்தன.

ஏழு மணி நேரம்வரை நீடிக்கும் மின்தடை மத்திய தீவுகளையும் பாதிக்கும் எனவும் வாரியம் குறிப்பிட்டது.

எரிசக்தி அமைச்சின் முழு விசாரணை

“முழு விசாரணை நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு மின்தடைக்கான காரணங்கள் விளக்கப்படும்,” என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஷேரரன் காரின் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மின்விநியோகம் எப்போது வழக்கநிலைக்குத் திரும்பும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ஆண்டின் மிக வெப்பமான மாதத்தில் குளிர்சாதன வசதிக்கான தேவை அதிகரித்துள்ள வேளையில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளன.

மின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த, மத்திய கிழக்குப் போர் தொடங்கிய பிறகு வாரம் நான்கு நாள்கள் அலுவலக வேலை என்ற திட்டத்தை அரசாங்கம் அறிவித்தும் மின்வெட்டு நிகழ்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்