அளவில் முயல் போலவும் பார்க்க கங்காரு போலவும் இருக்கும் பெட்டாங் என்னும் விலங்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகளில் மீண்டும் வலம்வரவுள்ளன.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதிகளில் காணப்படாமல் இருந்தன அந்த குட்டி கங்காருக்கள்.
ஆஸ்திரேலியாவில் 60 விழுக்காடு பகுதிகளில் காணப்பட்ட குட்டி கங்காருக்கள் பூனைகள், நரிகள், காடுகள் அழிப்பினால் இவற்றின் தொகை குறைந்தது.
இரண்டு ஆண்டுகள் ஆய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 120 குட்டி கங்காருக்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.
அவை கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. குட்டி கங்காருக்கள் குட்டியிடவும் தொடங்கியுள்ளன.
இதுபோன்ற சிறிய அளவில் உள்ள விலங்குகளால் ஆஸ்திரேலியாவின் சுற்றுப்புறத்திற்கு பெரும் நன்மை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பார்க்க சிறு அளவில் இருக்கும் குட்டி கங்காருக்களின் எடை 1.3 கிலோகிராம். கங்காருவின் மடியில் இருக்கும் பை போன்றுலவே இவற்றுக்கும் உள்ளது.

