சம்பளக் குறைப்புக்கு அமைச்சர்கள் தயார்: ஃபாமி ஃபாட்சில்

சம்பளக் குறைப்புக்கு அமைச்சர்கள் தயார்: ஃபாமி ஃபாட்சில்

1 mins read
91fc076c-d0ee-4173-9c82-cf46034822fb
மலேசியாவின் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில். - கோப்புப் படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதற்குத் தாங்கள் தயாராய் இருப்பதாக மலேசியாவின் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறியுள்ளார்.

அந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டதாக திரு ஃபாமி தெரிவித்தார். எனினும், இதன் தொடர்பில் பிரதமர் அன்வார் இப்ராகிம்தான் முடிவெடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பிரதமரின் எந்த உத்தரவையும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறேன்.

“அமைச்சர்களின் சம்பளம் தொடக்கத்திலிருந்தே அவ்வப்போது குறைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், எந்த உத்தரவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறேன்,” என்று திரு ஃபாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை (ஏப்ரல் 18) மலாயா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த சுகாதார நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.

பிரதமர் அன்வார் பேசியிருந்தார்

வெள்ளிக்கிழமை பிரார்த்தனையின்போது திரு அன்வார், செய்தியாளர்களிடம் பேசியபோது சம்பளக் குறைப்பு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து திரு ஃபாமி சனிக்கிழமை பதிலளித்தார்.

மத்திய கிழக்குப் பூசல் மோசமடைந்தால், அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்துப் புத்ராஜெயா பரிசீலிக்கத் தயாராய் இருப்பதாக திரு அன்வார் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) சொன்னார். அதேவேளை, மேலேசிய அமைச்சர்களின் சம்பளம் ஏற்கெனவே குறைவாக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்